search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டுத்துறை மந்திரி"

    கேல் ரத்னா விருது தராத அதிருப்தியில் பஜ்ரங் புனியா விளையாட்டு மந்திரியை இன்று சந்திக்க உள்ளதாகவும் தனக்கு சாதகமான முடிவு வரவில்லை எனில் வழக்கு தொடரப்போவதாகவும் கூறியுள்ளார். #RajivGandhiKhelRatna #BajrangPunia
    விளையாட்டு துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி கேபடன் விராட்கோலி, உலக பளுதூக்குதல் சாம்பியனான மீராபாய் சானு ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.



    இதற்கு காமன்வெல்த் போட்டியிலும் ஆசிய விளையாட்டிலும் தங்கப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அதிருப்தி தெரிவித்தார்.

    கேல்ரத்னா விருது பட்டியலில் அவரது பெயர் இருந்தது. ஆனால் அவர் விருதுக்கு தேர்வு செய்யப்படவில்லை.

    இது தொடர்பாக அவர் நேற்று பேட்டியளித்த போது, மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரதோரை இன்று சந்திக்க இருப்பதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் பஜ்ரங் புனியாவை நேற்று மாலை மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரதோர் சந்தித்து பேசினார்.

    இது தொடர்பாக பஜ்ரங் புனியா நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய மந்திரியை இன்று சந்திப்பதாக இருந்தேன். ஆனால் நேற்று மாலையே அவரை சந்திக்க அழைப்பு வந்தது.



    அப்போது கேல் ரத்னா விருதுக்கு எனது பெயரை ஏன் பரிசீலிக்கவில்லை என்றேன். அதற்கு அவர் நான் விருதுக்கான புள்ளிகளை பெறவில்லை என்று கூறினார். அது தவறு.

    விராட்கோலி, மீராபாய் சானுவை விட நான் அதிக புள்ளிகள் பெற்று உள்ளேன். எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனக்கு நீதி கிடைக்க வேண்டும்.

    இவ்விவகாரத்தை கவனிப்பதாக மத்திய மந்திரி கூறி உள்ளார்.

    இன்று மாலை வரை அரசின் பதிலுக்காக காத்து இருப்பேன். அதில் எனக்கு சாதகமான பதில் வரவில்லை என்றால் கோர்ட்டுக்கு செல்வேன் என்றார். #RajivGandhiKhelRatna #BajrangPunia
    ×